OTT: இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை தழுவி எடுக்கப்பட்ட 7 படங்கள்.. எந்தெந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Madras Cafe: 2013ல் வெளியான ஹிந்தி திரைப்படம் Madras Cafe. உண்மையான தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
Mumbai Meri Jaan: 2008ல் வெளியான தீவிரவாத தாக்குதல் திரைப்படம் Mumbai Meri Jaan. 2006ல் மும்பையில் நடந்த ரயில் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
Bell Bottom: 2021ல் வெளியான ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் Bell Bottom. 1980ல் 210 பயணிகளுடன் சென்ற இந்திய விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பணயக்கைதிகளாக அடைக்கப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து பயணிகள் எப்படி மீட்கப்பட்டனர் என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம், எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் காணலாம்.
Batla House: ஜான் ஆப்ரகாம் நடிப்பில் 2019ல் வெளியான திரைப்படம் Batla House. தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை சுட்டு வீழ்த்திய போலீஸ் அதிகாரி ஒருவர் சந்தித்த பின் விளைவுகளே இப்படத்தின் உண்மையான கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
URI: the surgical strike: 2019ல் வெளியான தீவிரவாத தாக்குதல் திரைப்படம் URI: the surgical strike. இந்திய ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுக்கிறது என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
Hotel Mumbai: 2018ல் வெளியான திரைப்படம் Hotel Mumbai. மும்பை உள்ள தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
The Attacks Of 26/11: 2013ல் வெளியான தீவிரவாத தாக்குதல் திரைப்படம் The Attacks Of 26/11. 2008ல் மும்பையில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தை ஜியோஹிட்ஸ்டார் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications