Home / Photos
நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் வச்சுக்கிட்டு இந்த படங்களை மிஸ் பண்ணலாமா? மைண்டை ரிலாக்ஸ் பண்ணும் டாப் 8 கார்ட்டூன் திரைப்படங்கள்!
By Chandru
உலகம் முழுவதும் கார்ட்டூன் திரைப்படங்களுக்கனே மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கலர்புல்லான, காமெடியான இந்த கார்ட்டூன் திரைப்படங்களை பார்க்க குழந்தை மனசு வேண்டும் என்று தான் சொல்லும். அதில் வரும் காமெடியான கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்த்தால் பாத்துகொண்டே இருக்க மனம் தூண்டும். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய டாப் 8 கார்ட்டூன் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
Wish dragon: 2021ல் வெளியான கார்ட்டூன் திரைப்படம் Wish dragon. நண்பர்களுக்காக ஏங்கித்தவிக்கும் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு, மாஜிக் ட்ராகன் நண்பனாக கிடைத்துவிடும். அதன்பின்னர் நடக்கும் மாஜிக் நிகழ்வுகளே இப்படத்தின் கதைக்களம். நெட்பிளிக்ஸ் ஓடிடி மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய படமாகும்.
2/8
Share
How to train your dragon: பலருக்கும் பரீட்சியமான ஃபேவரைட் படமாக இருப்பது How to train your dragon. 2010ல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்த்திடுங்கள்.
3/8
Share
The angry birds: 2016ல் வெளியான சூப்பர் ஹிட் கார்ட்டூன் திரைப்படம் The angry birds. முதலில் வீடியோ கேமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படமாகவும் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படம் என்றும் சொல்லலாம்.
4/8
Share
The Mitchells VS The Machines: 2021ல் வெளியான திரைப்படம் The Mitchells VS The Machines. வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் இந்த காமெடி கார்ட்டூன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க.
5/8
Share
Turbo: The angry birds படத்தை போல் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் கார்ட்டூன் திரைப்படங்களில் ஒன்று Turbo. சீறிப்பாயும் ரேஸ் காரின் வேகத்தையே மிஞ்சும் அளவிற்கு நத்தையின் அசத்திய வேகம் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது. உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து மகிழுங்கள்.
6/8
Share
Leo: கடந்தாண்டு நெட்பிளிக்ஸில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கார்ட்டூன் திரைப்படம் லியோ. பள்ளியில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் ஆமை மற்றும் பல்லியின் வாழ்க்கை கதையே இப்படத்தின் கதைக்களம்.
7/8
Share
Ultraman: சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் வரிசையில் கார்டூனில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் Ultraman. மான்ஸ்டரிடம் இருந்து டோக்கியோ நகரத்தை அல்டரா மேன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.
8/8
Share
The Garfield: ஓடிடியை கலக்கிக்கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் கார்ட்டூன் திரைப்படம் The Garfield. ஒரு சோம்பேறி பூனையின் வாழ்க்கை கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications