Home / Photos
பான் கார்டு.. 10 டிஜிட் கொண்ட பான் எண் பற்றிய விரிவான விளக்கங்கள்..!!
வங்கி கணக்கு துவங்க, வருமான வரி கணக்கியல் தேவை, டிமேட் கணக்கு தொடங்க என நிதி சார்ந்த அனைத்திற்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாகும். பான் கார்டின் 10 இலக்க எண்களின் அர்த்தம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1/7
Share
பான் (Permanent Account Number) எனும் நிரந்தர என்னானது 10 இலக்க குறியீடு ஆகும். இந்த எண்-ஐ மாற்ற முடியாது.
2/7
Share
முதல் ஐந்து எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதில் முதல் மூன்று எழுத்துக்கள் AAA தொடங்கி ZZZ உடன் முடிவடையும்.
3/7
Share
நான்காவது எழுத்து விண்ணப்பதாரர் குறித்த குறியீடு அடங்கியிருக்கும். அதாவது, தனி நபர் - P, இந்து கூட்டு குடும்பம்(HUF) - H, நபர்கள் சங்கம் (AOP) - A, செயற்கை நீதித்துறை நபர் (AJP) - J, நிறுவனம் - C, தொழிற்சாலை - F, அறக்கட்டளை - T, உள்ளூர் நிர்வாகம் - L, அரசு நிறுவனம் - G, நிறுவனம்/வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை - F என இருக்கும்.
4/7
Share
ஐந்தாவது எழுத்து தனிநபர் என்றால் அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது விண்ணப்பதாரரின் பெயரிலுள்ள முதல் எழுத்து இருக்கும்.
5/7
Share
அடுத்த வரக்கூடிய நான்கு எழுத்துக்கள் 0001 முதல் 9999 வரை இருக்கும் வரிசை எண்கள் ஆகும்.
6/7
Share
பான் கார்டின் இந்த எண்கள் இப்போது வருமான வரித் துறையில் இயங்கும் சீரீஸை குறிக்கும். அதில் கடைசி இலக்கம் எண்கள் அல்லது எழுத்தாக இருக்கலாம்.
7/7
Share
பான் கார்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய https://tin.tin.nsdl.com/pan என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். என்எஸ்டிஎல் (NSDL) அமைப்பின் மூலம் வங்கி பரிவர்த்தனைகள், கடன்கள் மற்றும் முதலீடுகள் கண்காணிக்கப்படுவதால் வரி ஏய்ப்பு மறைமுகமாக தடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications