பட்டையைக்கிளப்பும் 'பஞ்சப்பூர்' பேருந்து நிலையம்.. பஸ் ஸ்டாண்டா? ஏர்போட்டா? போட்டோஸ்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது இந்த பிரமாண்ட பேருந்து நிலையத்தின் போட்டோஸ் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அடிக்கல் நாட்டப்பட்டு ஒன்றை ஆண்டுக்கும் மேலாக பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இருந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து நிலையில் நேற்று அமைச்சர் கேஎன் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிறப்பம்சம்: நாள் ஒன்றுக்கு 1257 புறநகர் பேருந்துகளும், 1929 வெளியூர் பேருந்துகளும், ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை இயக்கும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையக ஏசி வாதி செய்யப்பட்ட ஒரே பேருந்து நிலையம் இதுவாகும்.
200 தேநீர் கடைகளும், 12 உணவகங்கள், 10 சிற்றுண்டிகள், 173 கழிப்பறைகள் மற்றும் 21 குளியல் அறைகளும் உள்ளன. பயணிகள் காத்திருப்பு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 52 காவல் துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications