பொங்கலுக்கு களமிறங்கிய 'பராசக்தி'.. 9 நாள் வசூல் என்ன? பட்ஜெட்டை தாண்டியதா? கலெக்ஷன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான 'பராசக்தி' திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பராசக்தி: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரமாண்ட திரைப்படம் 'பராசக்தி'. சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். வில்லனாக ரவி மோகன் நடிக்க, முக்கிய ரோலில் அதர்வா நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம், பொங்கலுக்கு ரிலீஸானது.
பொங்கல் ரிலீஸ்: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் போட்டிபோட்டு ரிலீஸாக இருந்தது. ஆனால் ஜனநாயகன் சென்சார் பிரச்சனையால் ரிலீஸில் தொய்வு ஏற்பட பராசக்தி சோலோவாக களம் கண்டது. சிவகார்த்திகேயன் பொங்கல் என்றே சொல்லலாம். மேலும் சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை கதை: 1960களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிக பெரிய இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய படமாகும். மாணவர்களின் இந்தி திணிப்பு போராட்டத்திற்கு தலைமை தங்கி, போராட்டத்தின் போது உயிரிழந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரனின் கதையே இப்படத்தின் கதைக்களம். ராஜேந்திரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
சுமார்: பெரும் எதிர்பார்ப்புடன் கோலாகலமாக ரிலீஸான இப்படம், கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்றது. சிவாவின் 25வது படம் என்பதால் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்றது.
பட்ஜெட்: முதல் நாளில் நல்ல வசூல் பெற்ற இப்படம், போக போக சுமாரான வசூலை பெற்றது. அதன்படி 135-140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த 10ம் தேதி ரிலீஸான இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
கலெக்ஷன்: முதல் நாளில் வசூல் வேட்டை நடத்திய பராசக்தி, அதன்பின்னர் பாக்ஸ் ஆபிசில் சரிவை சந்தித்தது. அதன்படி இப்படம் 7 நாள் முடிவில் 76 கோடி ரூபாயும், 9 நாளில் 84 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சிவாவின் அமரன் படத்தை ஒப்பிடுகையில் இப்படம் சுமார் என்றே சொல்லலாம். படத்தின் பட்ஜெட்டை கூட பராசக்தி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications