Home / Photos
எஸ்கே முதல் அதர்வா வரை.. 'பராசக்தி' பட நடிகர்கள் வாங்கிய சம்பளம்.. ஒவ்வொருவருக்கும் எத்தனை கோடி தெரியுமா?
By Chandru
பராசக்தி பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொருவருக்கும் எத்தனை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: filmibeat
Share
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'பராசக்தி'. சிவாவின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படமாகும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவிற்கு முக்கிய பங்கு இருந்ததால் இது ஒரு அரசியல் படம் என்றே சொல்லலாம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் இன்று ரிலீஸாகவேண்டியது நாளை 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அந்த வகையில் பராசக்தி படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொருவரின் சம்பளம் எவ்வளவு என்பதை வாங்க பார்ப்போம்.
2/6
Photo Credit: IMDB
Share
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதர்வா, இப்படத்தில் நடிக்க சுமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
3/6
Photo Credit: filmibeat
Share
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்திற்காக சுமார் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
4/6
Photo Credit: IMDB
Share
ஹீரோவாக இருந்து வந்த ரவி மோகன், இப்படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி இப்படத்தில் வில்லனாக நடிக்க சுமார் 16 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
5/6
Photo Credit: filmibeat
Share
பராசக்தியை இயக்கிய சுதா கொங்கராவுக்கு சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
6/6
Photo Credit: filmibeat
Share
இறுதியாக படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி ரூபாய் சம்பளமும், லாபத்தில் பங்கும் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் பராசக்தி படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 141 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது. பராசக்தி நாளை 10ம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications