ஓடிடியில் ரிலீஸாகவுள்ள பராசக்தி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்ன? பட்ஜெட்டை கூட வசூல் செய்யலையாம்? ரிப்போர்ட்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'பராசக்தி' திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் என்ன? எந்த ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சுதா கொங்கரா-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'பராசக்தி'. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகப்படுத்திய கூட்டணி ஆகும். இப்படம் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸானது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் வில்லனாக ரவி மோகன், முக்கிய ரோலில் அதர்வா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் பராசக்தி உருவானது.
கதை: ஹிந்தி மொழி திணிப்பை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பராசக்தி. ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களின் எழுச்சியை பேசும் படம். மாணவர்கள் அமைப்புக்கு தலைமை தங்கி தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த ராஜேந்திரனின் கதை. ராஜேந்திரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் சமூக பிரச்சனை ஆகியவற்றை பேசும் சீரியஸான படமாகும்.
பொங்கல் ரேஸ்: விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் சிவாவின் பராசக்தி போட்டிபோட்டு களமிறங்க இருந்தது. ஆனால் ஜனநாயகன் படமும் தணிக்கை குழுவும் மோதிக்கொண்டதால் படம் பொங்கலுக்கு ரிலீசாகவில்லை. இதனால் பராசத்தி நிம்மதி பெருமூச்சுடன் சோலோவாக ரிலீஸானது. ஆரம்பத்தில் களைகட்டிய ஷோ போக போக காத்து வாங்கியதாம். அந்த வகையில் பராசக்தி படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை வாங்க பார்ப்போம்.
பட்ஜெட்? பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசான பராசக்தி, விமர்சனத்தில் செமயா அடிவாங்கியது. ஒரு தரப்பு சூப்பர், மற்றொரு தரப்பு ஒரு முறை பார்க்கலாம் என்று கலவையான விமர்சனங்களை கூறி வந்தது. முன்னணி பிரபலங்கள் நடிப்பில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
மொத்த வசூல் என்ன? கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை தாண்டாத பராசக்தி, சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் ரிலீஸாகி இருந்தால் இந்த வசூலும் வந்துருக்காது என்றும் கூறுகின்றனர்.
ஓடிடி ரிலீஸ்? பொங்கலுக்கு ரிலீஸாகி 25 நாட்கள் ஆன சிவகார்த்திகேயனின் பராசக்தி வரும் பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications