Home / Photos
காதலும்.. ஆணவ கொலையும்.. ஓடிடியில் வெளியாகும் பாரிஸ் கஃபே.. எதில்? எப்போது? பார்க்கலாம்!
By Chandru
இந்த வாரம் ஓடிடியில் பாரிஸ் கஃபே திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. வாங்க எந்த ஓடிடி? எப்போது பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
இயக்குநர் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பாரிஸ் கஃபே'.
2/6
Share
கதை? குரு சோமசுந்தரம்-அனுமோல் இருவரும் மருத்துவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். இவர்களை பார்த்து பலரும் கண்ணுவைக்கும் அளவிற்கு மிகவும் அன்பான காதல் ஜோடியாக இருந்து வருகின்றனர்.
3/6
Share
குரு சோமசுந்தரம் ஒரு வேலையாக ஃபிரேனஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு செல்கிறார். அங்கு அவர் ஒரு காதல் ஜோடியை பார்த்து அதிர்ச்சியடைந்துவிடுகிறார். அந்த சம்பவத்தை ஊர் திரும்பிய பின் தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்கிறார்.
4/6
Share
சம்பவத்தை கேட்ட அனுமோல் தனது கணவர் இப்படி பட்டவரா என அதிர்ச்சியடைகிறார். இதனால் இவருக்குள் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அறிந்த குரு சோமசுந்தரதின் மகள் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி இருவரையும் ஒன்று சேர்க்க முயல்கிறார்.
5/6
Share
மனைவியிடம் குரு சோமசுந்தரம் சொன்னது என்ன? பாரிஸில் அவர் பார்த்த ஜோடி யார்? இருவருக்கும் இடையே ஏன் பிரிவு ஏற்பட்டது? இதற்கான விடையே இப்படத்தின் சஸ்பென்ஸ் கலந்த த்ரில் கதைக்களம்.
6/6
Share
ஓடிடி? இரண்டு வாரங்களுக்கு முன் தியேட்டரில் ரிலீஸான இப்படம், வரும் ஆக்டொபர் 9ம் தேதி அமேசான் பிரைம், சிம்பிளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications