Home / Photos
அய்யனார் துணை சீரியலில் நடக்கவிருக்கும்.. சோழன்-நிலா திருமண ரிஷப்ஷன்.. வெளியான போட்டோஸ்!
By Chandru
அய்யனார் துணை சீரியலில் நடக்கவிருக்கும் சோழன்-நிலா திருமண ரிஷப்ஷன் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
1/6
Photo Credit: instagram@madhumitha
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று அய்யனார் துணை. இத்தொடர்க்கு தனி ஃபேன்ஸ் கூட்டமே உள்ளது. சமீபத்தில் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
2/6
Photo Credit: instagram@madhumitha
Share
அத்தொடரில் தற்போது திருமணம் ரிஷப்ஷன் எபிசோட் ஓடிக்கொண்டிருக்கிறது. விவாகரத்து செய்துகொண்ட சோழனும் நிலவும் மீண்டும் ஒன்றிணைந்து திருமணம் செய்துகொண்டனர்
3/6
Photo Credit: instagram@madhumitha
Share
பெற்றோரை மீறி சோழனை நிலா திருமணம் செய்துகொண்டதால் சோழன் குடும்பத்தை அவமானப்படுத்த நிலா குடும்பத்தினர் பல வேலைகளை செய்ய முயற்சிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் நிலா பெற்றோர் தானாக முன்வந்து மகளுக்கு திருமண ரிஷப்ஷன் செய்யவேண்டும் என கூறுகின்றனர்.
4/6
Photo Credit: instagram@madhumitha
Share
இதனால் சோழன் குடும்பம் ரிஷப்ஷன் நிகழ்ச்சிக்காக நிலா பெற்றோர் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு சோழனை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அனைத்தையும் செய்கின்றனர் நிலா குடும்பத்தினர். இருப்பினும் இவர்கள் செய்யும் அனைத்தையும் சோழனும், அவரது குடும்பத்தினரும் நிலவுக்காக பொறுத்துக்கொள்கின்றனர்.
5/6
Photo Credit: instagram@madhumitha
Share
திருமண ரிஷப்ஷன் எபிசோட் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நிலா ரோலில் நடித்துள்ள மதுமிதா தனது இன்ஸ்டாவில் சீரியல் பற்றிய ஒரு அப்டேட்டை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@madhumitha
Share
திருமண ரிஷப்ஷன் எப்படி நடக்கபோகுதே என ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்க மேடையில் சோழன்-நிலா இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை மதுமிதா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் லெஹங்கா உடையில் செம அழகாக இருக்கும் மதுமிதாவின் போட்டோஸ் இளசுகளின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications