Home / Photos
மகா கும்பமேளாவில் பங்கேற்று.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி.. போட்டோஸ்!
By Chandru
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இன்று 11 மணியளவில் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
1/6
Photo Credit: pti
Share
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள் ஒன்றுகூடினார்.
2/6
Photo Credit: pti
Share
கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 32 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்துள்ளனர்.
3/6
Photo Credit: pti
Share
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும் புனித நீராட வருகை தருகின்றனர்.
4/6
Photo Credit: pti
Share
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி, மகா கும்பமேளா நடைபெறும் இடத்தை மோட்டார் படகு மூலம் உபி முதல்வர் யோகியுடன் சேர்ந்து பார்வையிட்டார்.
5/6
Photo Credit: pti
Share
பின்னர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
6/6
Photo Credit: pti
Share
புனித நீராடிய பின் பிரயாக்ராஜில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


Click it and Unblock the Notifications