Home / Photos
PHOTOS: காணும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்! அதன் வரலாறு தெரியுமா? சுவாரசிய தகவல்!
By Chandru
Do you know the history of kaanum Pongal. check the full details here.
1/7
Share
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இன்று காணும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாளும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். ஆமாம் காணும் பொங்கல் என்றல் என்ன? எதற்கு இந்த நாளை கொண்டாடுகிறோம்? என நீங்கள் நினைத்ததுண்டா? தெரியவில்லை என்றல் இந்த பதிவு உங்களுத்தான்.
2/7
Share
தமிழர்களுக்கே உரித்தான தமிழ் மாதத்தின் முதல் மாதம் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஆங்கில மாதம் ஜனவரி 15ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
3/7
Share
பொங்கல்: தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம், இரண்டாம் நாள் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளை போற்றும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது இறுதியாக காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
4/7
Share
காணும் பொங்கல் என்றல் என்ன? மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்றும், நீர்நிலங்களுக்கு சென்றும் குடும்பத்தோடு விதவிதமான உணவுகளை சுவைத்து கொண்டாடப்படும் பொங்கல் காணும் பொங்கல் ஆகும். அப்படித்தான் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அது தான் இல்லை. காணும் பொங்கலின் வரலாறு என்ன என்பதை பார்ப்போம்..
5/7
Share
உண்மையில் காணும் பொங்கல் என்பது கன்னி பொங்கல் என்று கொண்டாடப்பட்டது. கன்னி பொங்கலன்று திருமணமாகாத பெண்கள், இளைஞர்கள் கொண்டாடும் பொங்கல் தான் கன்னி பொங்கல். திருமணம் ஆகாத பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கன்னி பொங்கல் அன்று பொங்கல் வைத்து வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.
6/7
Share
அதேபோல் திருமணம் ஆகாத இளைஞர்களும் ஒன்றுகூடி பொங்கல் வைத்து குலதெய்வத்தை வழிபட்டால் விரைவில் திருமணம் என்று என காலம் காலமாக கன்னி பொங்கல் இவ்வாறு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நாகரீகம் வளர வளர இந்த பழக்கங்கள் அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் காணும் பொங்கல் என்றல் மக்கள் தங்களின் குடும்பத்துடன் அவுட்டிங் செல்வதுதான் என்று மாறிவிட்டது.
7/7
Share
அதிலும் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் குடும்பத்துடன் மெரினா, பெசன்ட் நகர், மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா என பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று குடும்பத்துடன் காணும் பொங்கலை என்ஜாய் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications