Home / Photos
PHOTOS: வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் மகளை பாத்துருக்கீங்களா? வெளியான புகைப்படங்கள்!
By Chandru
villan actor ponnambalam daughter and family photos trendy on internet. check out his family photos here.
1/7
Share
வில்லன் நடிகரான பொன்னம்பலத்தில் மகளின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது அவரின் மகள் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகிறது.
2/7
Share
90களில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகை பொன்னம்பலம். 1988ம் ஆண்டு கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன் என அடுத்தடுத்த படங்களில் வில்லன் நடிகராக நடித்து வந்தார்.
3/7
Share
ஸ்டண்ட் ஃபைட்டர்களில் ஒருவராக வலம் வந்த பொன்னம்பலம், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இப்படம் பொன்னம்பலத்தின் சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இவரை கபாலி என்று அழைக்கத் தொடங்கினர்.
4/7
Share
அப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்து அசத்தினார். தனது கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்ட பார்வையாளர்களையே கதிகலங்க செய்யும் பொன்னம்பலம், சரத்குமார் உடன் நாட்டாமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
5/7
Share
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளும் அதிக படங்களில் நடித்துள்ளார். வில்லனாக பார்வையாளர்களை பதறவைத்த பொன்னம்பலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு அவ்வப்போது மட்டும் ஒரு சில படங்களில் கேமியோ ரோலில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார்.
6/7
Share
அதனைத்தொடர்ந்து உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட பொன்னம்பலத்துக்கு திரை பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர். அதன்பின்னர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் முழு மருத்துவ செலவையும் ஏற்று அவரை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர உதவினார். மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்த பொன்னம்பலம் மீண்டும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/7
Share
இந்த நிலையில் பொன்னம்மபலத்தில் குடும்ப புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொன்னம்பலத்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் பொன்னம்பலத்தின் மகள் பலரையும் ஈர்த்துள்ளார். உங்களுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்காங்களா? என கமெண்ட் செய்தும் புகைப்படத்துக்கு லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications