Home / Photos
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய 'நான் கடவுள்' பட நடிகை.. யார்? இப்போ என்ன செய்கிறார்? கிளிக்ஸ்
By Chandru
பொதுவாகவே நடிகைகள் திருமணம் செய்துகொள்வதால் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டால் தங்களது சினிமா கேரியர் முடிவுக்கு வந்துவிடுமோ என்பதால் 40+ வயதில் திருமணம் செய்துகொள்வதை பெரிதும் விரும்புகின்றனர். இருப்பினும் அதில் சிலர் 30+ வயதில் திருமணம் செய்துகொன்டு சினிமாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும் சிலர் சினிமாவில் செம உச்சத்தில் இருந்தபோதே திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகி தங்களது சினிமா கேரியருக்கு ஃபுல் ஸ்டாப் போட்டவர்களும். உதாரணமாக ஜெனிலியா, அசின் உள்ளிட்ட சிலர். அந்தவகையில் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகையை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
1/5
Photo Credit: instagram
Share
'உள்ளம் கேட்குதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா உமாசங்கர். இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தது.
2/5
Photo Credit: instagram
Share
முதல் படம் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜேஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'நான் கடவுள்' படத்தில் பூஜாவின் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை பூஜா என்று இயக்குநர் பாலா தெரிவித்தார்.
3/5
Photo Credit: instagram
Share
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா, மலையாளம், தெலுங்கு அதுமட்டுமின்றி சில ஆங்கில குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர், இலங்கையிலும் சில படங்களில் நடித்து அங்கேயும் தனக்கே ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/5
Photo Credit: instagram
Share
ரசிகர்களால் கொண்டப்பட்ட பூஜா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் பிரசான் டேவிட் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கொழும்புவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகிப்போனது. 2015ல் வெளியான 'கடவுள் பாதி மிருகம் பாதி' என்ற படமே இவர் நடித்த இறுதி படமாகவும். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஆளையே காணோம். இருப்பினும் இலங்கை திரைப்படங்களில் அவ்வப்போது காமியோ ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications