Home / Photos
மாவுக்கட்டுக்கு ரெடி ஆகும் PUBG மதன்...! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு!
By Chandru
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1/9
Share
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2/9
Share
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, யூ-டியூப் மூலம் பிரபலமானவர் பப்ஜி மதன்.
3/9
Share
இவர் நேரடி ஒளிபரப்பு செய்ததுடன், அதில் சிறுமிகள் மற்றும் பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசி வந்த யூ-டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்தன.
4/9
Share
இதனடிப்படையில் பப்ஜி மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5/9
Share
மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
6/9
Share
இதனையடுத்து கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
7/9
Share
இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
8/9
Share
இதனையடுத்து பப்ஜி மதனை போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்துள்ளனர்.
9/9
Share
இந்நிலையில் முதுகு வலி தொடர்பான சிகிச்சைகள் மதனுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications