bredcrumb

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!

By Chandru
| Updated: Tuesday, April 26, 2022, 10:04 [IST]
ஐ.பி.எல்.போட்டியில் சென்னை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
1/11

2/11
188 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு ஓப்பனிங் ஜோடி இந்தமுறையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஓவரிலேயே உத்தப்பா ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். 

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
3/11
அடுத்தடுத்து இறங்கிய சான்டனர், ஷிவம் துபே ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாடும் அம்பதி ராயுடுவும் கூட்டணி சேர்ந்தனர்.

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
4/11
வழக்கத்துக்கு மாறாக, அம்பதி ராயுடு இன்று வந்தது முதலே அதிரடியாக விளையாடினார். ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் எடுக்கும் முன்னதாக, ராயுடு 30 ரன்களை தாண்டி சேர்த்தார். 

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
5/11
சிறிதுநேரத்தில் கெய்க்வாட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, ராயுடு ஒற்றை நபராக பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
6/11
6 சிக்ஸர்களை விலகிய ராயுடு, குறிப்பாக சந்தீப் சர்மா வீசிய 16வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார்.

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
7/11
எனினும், ரபாடா வீசிய 18வது ஓவரில் யார்க்கர் பந்தில் போல்டாகி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
8/11
12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி களம் புகுந்தார். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூடியது. கடந்த போட்டியில் இறுதி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்த அவர் மீது எதிர்பார்ப்பு கூடியது. 

PHOTOS : கடைசி நேர த்ரில் காட்டிய தோனி... பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி... சோகத்தில் ரசிகர்கள்!
9/11
அதற்கேற்ப 19வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட, ரிஷி தவான் வீசிய முதல் பந்தை சிக்ஸராக பறக்கவிட்ட அவர், மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X