Home / Photos
எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்! 10 வருஷத்தில் ஆளே மாறிய ரைசா வில்சன்.. அவரே பதிவிட்ட போட்டோஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சன், 10 வருஷம் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் கல்யாணுடன் நட்பாக பழகிய இவர், 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரிஷுடன் ஜோடியாக நடித்து ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: instagram@raiza wilson
Share
அதனை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'தனுஷ் ராசி நேயர்களே' படத்தில் நடித்திருந்தார். FIR, பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். ஹீரோயினாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் சொல்லும் அளவுக்கு ரீச் கொடுக்காததால் இவருக்கு படங்கள் தேடி வருவது குறைந்தது.
3/5
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தவித்து வரும் ரைசா, சோசியல் மீடியாக்கள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். கவர்ச்சி காட்டுவதால் பட வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்த்த ரைசாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
4/5
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழில் படங்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா படங்களில் நடித்து வருகிறார். ஒரு தெலுங்கு படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா, தனது பழைய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் பகிர்ந்து 10 வருஷத்தில் எப்படி மாறிட்டேன் என்பதை நினைவு கூறிந்துள்ளார்.
5/5
Photo Credit: instagram@raiza wilson
Share
2010ல் ரைசா எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் 2025 தற்போதைய புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்து 10 வருஷ வித்தியாசத்தை காட்டியுள்ளார். நண்பர்களுடன் பார்ட்டி செய்ததையும், ஜாலியாக ஊர் சுற்றிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ரைசாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications