Home / Photos
IPL 2026: ராஜஸ்தானிடம் மோசமாக தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. சோகத்தில் ஃபேன்ஸ்.. போட்டோஸ்!
By Chandru
நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி மெகா வெற்றி பெற்றுள்ளது.
1/8
Photo Credit: PTI
Share
நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
2/8
Photo Credit: PTI
Share
சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
3/8
Photo Credit: PTI
Share
19.4 ஓவரில் மொத்த விக்கெட்டையும் இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. 128 எடுத்தால் வெற்றி என்ற ஈஸியான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தது.
4/8
Photo Credit: PTI
Share
ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர். சென்னை அணி பௌலர்களை பந்தாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
5/8
Photo Credit: PTI
Share
ஜெய்ஸ்வாலை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, சென்னை அணி பௌலர்களை போலந்து கட்டினார். வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு செம ஷாக் கொடுத்தார்.
6/8
Photo Credit: PTI
Share
இறுதியாக, 12.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 128 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி மெகா வெற்றி பெற்றது.
7/8
Photo Credit: PTI
Share
சென்னை அணியின் படுதோல்வியால் ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர்.
8/8
Photo Credit: PTI
Share
மேலும் இன்று இரவு பஞ்சாப்-குஜராத் அணிகள் மோதவுள்ளன.


Click it and Unblock the Notifications