ரஜினி - கமல் இணைந்து நடித்த படங்கள்.. என்னென்ன? எந்த தளத்தில் பார்க்கலாம்?
ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ரஜினி கமல் இருவரும் 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். அப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். அந்த வகையில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் என்னென்ன? எந்த தளத்தில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1975ம் ஆண்டு ரஜினி கமல் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் 'அபூர்வ ராகங்கள்'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
1976ம் ஆண்டு ரஜினி கமல் இணைந்து நடித்த இரண்டாவது திரைப்படம் 'அந்துலேனி கதா'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
கமல் ஹீரோவாக ரஜினி வில்லனாக நடித்த திரைப்படம் 'மூன்று முடுச்சு'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
1977ம் ஆண்டு ரஜினி கமல் இணைந்து நடித்த நான்காவது திரைப்படம் 'அவர்கள்'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
கமல் ஹீரோவாக ரஜினி வில்லனாக நடித்த மற்றொரு திரைப்படம் 'பதினாறு வயதினிலே'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
ரஜினி கமல் நடிப்பில் 1977ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ஆடும் புலி ஆட்டம்'. இப்படத்தி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
ரஜினி கமல் நடிப்பில் 1978ம் ஆண்டு வெளிவந்த திராய்ப்படம் 'இளமை ஊஞ்சலாடுகிறது'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
1978ம் ஆண்டு ரஜினி கமல் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படம் 'வயசு பிலிச்சிந்தி'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
1978ம் ஆண்டு ரஜினி கமல் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'தப்புத் தாளங்கள்'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications