Home / Photos
ராமாயணாவில் சூர்ப்பனகையாக மிரட்டிய ரகுல் ப்ரீத் சிங்.. வெளியான BTS கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
ரமேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் 'ராமாயணா'. இப்படம் நேற்று 5ம் தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசானது.
2/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
ஏஆர் ரகுமான் இசையில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது உலகளவில் ரிலீஸாகி சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
மிக பெரிய பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ராமாயணாவின் மொத்த பட்ஜெட் 4000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக புது சாதனை படைத்துள்ளது.
4/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
மாபெரும் எதிர்பார்ப்புடன் உலகளவில் ரிலீஸான ராமாயணா, முதல் நாள் முதல் ஷோவில் இருந்து அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக அப்படத்தின் VFX காட்சிகள் வேற லெவல், ஹாலிவுட் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
5/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
இந்த நிலையில் ராமாயணா படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று சூர்ப்பனகை. அந்த ரோலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "சவாலான ரோலில் நடிப்பது எனக்கு உற்சாகத்தை கொடுக்கும்" என அவர் கூறியிருந்தார்.
6/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
தியேட்டரில் வெற்றிநடைபோட்டு வரும் ராமாயணா படத்தின் சில BTS புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். நடிகர்களும், டெக்னீஷியன்களும், படக்குழுவினர்களும் படத்திக்காக எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை அந்த புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.
7/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
சூர்ப்பனகை கதாபாத்திரக்காக போடப்பட்ட மேக் அப் உட்பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications