Home / Photos
குழந்தையை பராமரிக்க லட்சங்களில் சம்பளம் தரும் ராம் சரண் - உபாசனா ஜோடி.. ஏன் எதற்கு?
By Chandru
தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசனா ஜோடியின் ஒரே பெண் குழந்தையான க்ளின் காராவை பராமரிக்கும் பெண் பராமரிப்பாளருக்கு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Share
தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசனா ஜோடியின் ஒரே பெண் குழந்தையான க்ளின் காராவை பராமரிக்கும் பெண் பராமரிப்பாளருக்கு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Share
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். 2007ம் ஆண்டு முதல் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த ராம் சரண் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார்.
3/8
Share
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராம் சரண் உலக ஃபேமஸ் ஆனதற்கு காரணம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் டூப்பர் மெகா ஹிட்டானது.
4/8
Share
இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் அதிக மக்களால் அதிகம் விரும்பப்பட்ட படமாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் இருந்தது. இந்தியாவில் வசூல் வேட்டை செய்த இப்படம் வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம் சரண் பான் இந்திய நடிகராக உருமாறினார்.
5/8
Share
இந்தியளவில் ராம் சரணின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என செம்ம பிஸியாகி விட்டார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
6/8
Share
தென்னிந்தியாவின் ஸ்டாராக வலம் வரும் ராம் சரண் கடந்த 2012ம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சுமார் 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து இந்த ஜோடிக்கு கடந்தாண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் க்ளின் காரா.
7/8
Share
இந்த நிலையில் ராம் சரண் படங்களில் செம்ம பிஸியாக இருக்க இவரின் மனைவி உபாசனா பிசினஸில் செம்ம பிஸியாக இருப்பதால் குழந்தையை பார்த்துக்கொள்ள நேரம் போதவில்லை. இதனால் சாவித்ரி என்ற குழந்தை பராமரிப்பாளரை நியமத்துள்ளனர். இவர் ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகளுக்கு பராமரிப்பாளராக வேலை செய்துள்ளாராம்.
8/8
Share
குழந்தை பராமரிப்பதில் பல வருடங்கள் அனுபவமுள்ள சாவித்ரிக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து க்ளின் காராவை பராமரிக்க ராம் சரண் - உபாசனா ஜோடி நியமத்துள்ளனர். பல நட்சத்திர ஜோடிகளின் குழந்தைகளை பராமரித்துள்ளதாலும், நம்பிக்கைக்குரியவராக இருப்பதாலும் சாவித்ரிக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வெளியாகி இணையத்தளத்தில் தீயாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications