வசூலில் மாஸ் காட்டிய ரவி மோகனின் டாப் 6 திரைப்படங்கள்.. 100 கோடி வசூலித்த முதல் படம் எதுன்னு தெரியுமா? முழு லிஸ்ட்!
ரவி மோகன் நடிப்பில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிய திரைப்படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ரவி மோகன், ஹன்சிகா நடிப்பில் 2015ல் வெளியான திரைப்படம் 'ரோமியோ ஜூலியட்'. காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 35 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது. சூப்பரான இந்த ரொமான்டிக் காமெடி படத்தை எம்எக்ஸ் பிளேயர், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் காணலாம்.
ரவி மோகன் நடிப்பில் 2015ல் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'பூலோகம்'. ரவி மோகனுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். பாக்சிங் விளையாட்டு அதனை சுற்றி நடக்கும் அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாக்கப்பட்டது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மொத்தம் 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்த சூப்பர் ஹிட் படம் எந்த ஓடிடி தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன், லட்சுமி மேனன், காலி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் 2016ல் வெளியான ஹாரர் திரைப்படம் 'மிருதன்'. ஜாம்பியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆக்ஷன், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 34 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படத்தை சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 தளத்தில் காணலாம்.
இயக்குநர் மோகன் ராஜ் இயக்கத்தில் ரவி மோகன், தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான காமெடி, ஆக்ஷன் திரைப்படம் 'தில்லாலங்கடி'. வடிவேலுவின் சூப்பரான காமெடியில், ரவி மோகனின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது.
அமீர் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான திரைப்படம் 'ஆதிபகவான்'. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்த இப்படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த சூப்பர் ஹாட் படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.
மோகன் ராஜ் இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தனி ஒருவன்'. ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தியேட்டரில் வெளியாகி மெகா ஹிட்டான இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. ரவி மோகனின் திரை வாழ்க்கையில் 100 கோடி வசூலை கடந்த முதல் படம் இதுவாகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications