Home / Photos
ஒரு காலத்தில் ட்ரோல்.. தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன்! ஆர்சிபி-யின் மாஸ் கம்பேக்!
By Divya Bala
தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, வெற்றியை உற்சாகமாக கொண்டாடியது. வீரர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியில் விராட் கோலியின் அபாரமான ஆட்டம் முக்கிய பங்காற்றியது.
2/5
Photo Credit: Instagram
Share
156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபிக்கு, விராட் கோலி 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரது அதிரடி இன்னிங்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
3/5
Photo Credit: Instagram
Share
ஒரு காலத்தில் கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி, இன்று தொடர்ந்து இரண்டு சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதிலும் விராட் கோலி மீண்டும் ஒருமுறை நாயகனாக மாறி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் அணியினருடன் அவர் ஆடிய கொண்டாட்ட நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு இந்த வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் அவர், அதற்கு முந்தைய தினமே அணியை தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லச் செய்து மறக்க முடியாத தருணத்தை பரிசாக பெற்றுள்ளார். இந்த வெற்றி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications