ரீ ரிலீஸ் செய்யப்பட்டு.. முதல் நாளில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த தமிழ் படங்கள்.. விஜய்யா? அஜித்தா? யாரு டாப்?
ஸ்டார் நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த ஸ்டார் நடிகர்களின் படங்களில் விஜய்யின் 'குஷி' 5ம் இடத்தை பிடித்துள்ளது. 2000ம் ஆண்டு ரிலீஸான இந்த ஃபீல் குட் ரொமான்டிக் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் 90 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் விஜய்யின் 'சச்சின்' திரைப்படம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. வடிவேலுவின் அசத்தலான காமெடியுடன், விஜய்-ஜெனிலியா கூட்டணியின் ரொமான்டிக் காட்சிகள் நிறைந்த இப்படம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கோலாகலமாக ரிலீஸான சச்சின், முதல் நாளில் சுமார் 2.15 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'படையப்பா'. 1999ம் ஆண்டு ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திய படையப்பா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்படி அப்படம் முதல் நாளில் சுமார் 3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
விஜய், திரிஷா நடிப்பில் 2004ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'கில்லி'. மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், கடந்த 2024ம் ஆண்டு ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, முதல் நாளில் சுமார் 4.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'மங்காத்தா'. 2011ல் அஜித்தின் 50வது படமாக ரிலீசான மங்காத்தா வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி வேற லெவல் ஹிட். வில்லன் அஜித் நடிப்பு ரசிகர்களால் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டது. அப்படம் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி உலகளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கார் ரேசிங்கில் இறங்கிய அஜித்தை மீண்டும் திரை பார்க்கபோகிராம் என்ற ஆர்வம் பலமடங்கு இருந்தது. அதன்படி கோலாகலமாக ரீ ரிலீஸான மங்காத்தா, முதல் நாளில் மட்டும் சுமார் 4.55 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications