Home / Photos
'தெய்வமகள்' அண்ணியாரை நியாபகம் இருக்கா? காதல் கணவர், மகளுடன் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
தெய்வமகள் சீரியல் வில்லி அண்ணியாரின் சமீபத்திய போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.
2/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. வெவ்வேறு மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மலையாளத்தில் இருந்து பிற மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக்கொண்டிருந்த ரேகா, சீரியலில் களமிறங்கினார். தமிழில் 'பாரிஜாதம்' என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
4/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
தெய்வமகள் சீரியலில் வில்லி ரோலில் நடித்து வந்தார். அதில் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியல் இவருக்கு புது அடையாளத்தையே கொடுத்தது.
5/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
தெய்வமகள் தொடரில் அண்ணியார் ரோல் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. அனைவராலும் வெறுக்கப்பட்ட அண்ணியராக வலம் வந்தார். இதன் மூலம் இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். ரேகா என்ற பெயர் மறைந்து அண்ணியார் என்ற பெயர் இவருக்கு அடையாளமாக மாறியது.
6/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
தெய்வமகள் ஹிட்டை தொடர்ந்து நந்தினி, தமிழும் சரஸ்வதியும், ஜீ தமிழின் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளிலும் தனது கணவருடன் பங்கேற்றார். தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் செம பிஸியாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
தற்போது அண்ணியார் ரேகாவின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெய்வமகள் சீரியல் வில்லியா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் ரேகாவின் இன்ஸ்டா போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.
8/8
Photo Credit: instagram@Rekha Krishnappa
Share
இந்த நிலையில் ரேகா கிருஷ்ணப்பா தனது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் சமீபத்திய போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications