Home / Photos
'காதல் கொண்டேன்' பட ஹீரோயினை நினைவிருக்கா? 44 வயதில் இளமை ஊஞ்சலாடுதே.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
காதல் கொண்டேன் பட நடிகையின் ரீ-சென்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: sunnxt
Share
2002ல் தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சோனியா அகர்வால். பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
2/9
Photo Credit: sunnxt
Share
'காதல் கொண்டேன்' பட வெற்றியை தொடர்ந்து சிம்புவின் 'கோவில்' படத்தில் நாயகியை நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
3/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இப்படி இருக்க இவர், கடந்த 2006ல் இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்தும் விலகி இருந்தார்.
4/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த சோனியா, 2010ல் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிப்பில் களமிறங்கினார். விவாகரத்து பின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் இன்றுவரை சிங்கிளாக இருந்து வருகிறார்.
5/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
சிங்கிளாக செம ஜாலியாக இருக்கும் சோனியா, தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
6/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
படங்களில் பிஸியாக இருக்கும் சோனியா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தொடர்ந்து தக்கவைக்க முயற்சித்து வருகிறார்.
7/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த சோனியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சில ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், இளமை லுக் தான்.
8/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
தற்போது 44 வயதாகும் சோனியா அகர்வால் அதே இளமையுடன் இன்றும் எப்படி உள்ளார்? அவரின் அழகுக்கும், ஃபிட்னசுக்கும் என்ன காரணம்? கொஞ்சம் சொன்னால் நாங்களும் ஃபாலோ செய்வோமோ என சோனியாவுக்கு ரசிகர்கள் கமன்ட் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
9/9
Photo Credit: instagram@soniya agarwal
Share
தற்போது சோனியாவின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications