நாதஸ்வரம் சீரியல் மகாவ நியாபகம் இருக்கா? ஆளே மாறிட்டாரே? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க?
நாதஸ்வரம் சீரியல் நடிகை கீதாஞ்சலியின் சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
90களில் வெளிவந்த பெரும்பாலான சீரியல்கள் இன்றும் பலரின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 90ஸ் கிட்ஸ் இன்றும் அந்த சீரியல்களை மிஸ் செய்கின்றனர் என்றே சொல்லலாம். நாம் மிஸ் செய்யும் அந்த சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களும் இன்றும் பலரின் நினைவுகளில் இருந்து நீங்காமல் உள்ளது. அப்படியான சீரியல்களில் ஒன்று தான் 'நாதஸ்வரம்'.
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். அத்தொடரின் இயக்குநராகவும், நாயகனாகவும் இருந்தவர் திருமுருகன். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நாயகியாக நடிகை ஸ்ரித்திகா 'மலர்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே சீரியலில் ஹீரோவான கோபி கதாபாத்திரத்தை காதலிக்கும் அத்தை பொண்ணு கதாபாத்திரத்தில் நடிகை கீதாஞ்சலி 'மகா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நாதஸ்வரம் சீரியல் சுமார் 5 வருடம் சன் டிவியில் ஒளிபரப்பானது. சீரியலில் பாட்டு வந்ததும், எடிட் செய்யாமல் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் என அப்போதே பல வித்தியாசங்களை கொண்டுவந்தவர் திருமுருகன்.
நாதஸ்வரம் சீரியல் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கீதாஞ்சலி, வாணி ராணி உட்பட சில சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் திருமண பந்தத்தில் இணைந்துவிட்டார்.
திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மேலும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வது கீதாஞ்சலியின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கீதாஞ்சலியின் இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நாதஸ்வரம் மகாவா இது? ஆளே டோட்டலா மாறிட்டாங்களே? என கீதாஞ்சலியின் இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்துடன் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கீதாஞ்சலியின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications