தெய்வத்திருமகள் பட அனுஷ்காவுக்கு தோழியாக வரும் நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்காவுக்கு தோழியாக நடித்து சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையின் போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தனம் நடிப்பில் 2011ல் வெளிவந்த திரைப்படம் 'தெய்வத்திருமகள்'. ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அறிவுகுறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட நபராக விக்ரம் நடித்திருப்பார். அவரின் மகள் கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் நடித்திருப்பார். அதேபோல் விக்ரமுக்கு உதவும் வழக்கரைஞராக அனுஷ்காவும் அவருக்கு அசிஸ்டண்டாக சந்தானமும், தோழியாக நடிகை பிரியாவும் நடித்துள்ளனர். அப்பா மகள் பாசத்தை பேசும் காமெடி கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாகும்.
அப்படத்தில் அனுஷ்காவுக்கு தோழியாக நடித்த பிரியா தான் தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டவராக இருந்து வருகிறார். ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், தற்போது எப்படி உள்ளார்? என ரசிகர்கள் இணையத்தளத்தில் தேடி வந்தனர். அதேபோல் அவரின் இன்ஸ்டா பேஜ் என்ன? என்பதையும் தேடி வந்தனர்.
துணை நடிகையாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த பிரியா, அதன்பின்னர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகி திருமண வாழ்க்கைக்குள் என்ட்ரி கொடுத்தார்.
விஷாலின் 'மார்க் ஆண்டனி', ஆர்யாவின் 'அனந்தன் காடு', ஆரோமலே ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வினோத் குமாரை திருமணம் செய்துகொண்டார். பிரியா-வினோத் குமார் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, தெய்வத்திருமகள் பிரியாவின் குடும்ப போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications