Home / Photos
ரோகிணி தியேட்டர் உரிமையாளர் வீட்டில் டும் டும் டும்.. மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்.. வெளியான போட்டோஸ்!
By Chandru
ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் ரேவந்த் சரணின் திருமணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவரின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
1/6
Share
சென்னையின் மிகவும் பிரபலமான ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சரணின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
2/6
Share
சென்னை என்று சொன்னவுடன் பலருக்கும் நினைவில் வருவது பொழுதுபோக்கு இடங்கள், பிரபலமான நபர்களின் பெயர், சினிமா உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லலாம். ஆனால் இதில் தியேட்டர் மட்டும் குறிப்பிட்டு கேட்டால் முதலில் வரும் வார்த்தை ரோகிணி தியேட்டர் தான். அந்தளவுக்கு சென்னையில் மிகவும் பாப்புலராக உள்ளது.
3/6
Share
அதிலும் நடிகர் விஜய்யின் கோட்டை என்றும் ரோகிணி தியேட்டரை சொல்லுவார்கள். விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ ரோகிணியில் தான் பார்ப்பேன் என ரசிகர்கள் ஆடம்பிடிப்பார்கள். அதேபோல் நார்மல் ஆடியன்சிக்கும் ரோகிணி தியேட்டர் என்றால் தனி பிரியம் தான்.
4/6
Share
அதேபோல் நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் படம் எப்படி ஓடுகிறது, ஆடியன்ஸின் ரியாக்ஷன் எப்படி உள்ளது ஏப்பத்தை பார்க்க ரோகிணி தியேட்டருக்கு தான் செல்வார்கள். நடிகர் விஜய் பலமுறை ரசிகர்களுடன் ரசிகராக சென்று படம் பார்த்துள்ளார். அதேபோல் தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல ஸ்டார் பிரபலங்களும் ரோகிணி தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளனர்.
5/6
Share
படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே தியேட்டருக்கு போகணும் என்றிருந்த காலம் போய் அஜித், விஜய், கமல், ரஜினி உள்ளிட்டோர் படங்களின் ட்ரைலர் வெளியானாலும் ரோகிணியில் கூட்டம் அள்ளும். ட்ரைலரை திரையில் காட்டும் பழக்கத்தை ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியது ரோகிணி தியேட்டர்.
6/6
Share
இப்படியாக சென்னையின் அடையாளமாக, ரசிகர்களின் கோட்டையாக திகழும் ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் ரேவந்த் சரண். இவருக்கு நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். தற்போது ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் ரேவந்த் சரணின் திருமணம் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications