Home / Photos
டேட்டிங் ஆப் மூலம் மலர்ந்த காதல்.. ஓடிடியில் வெளியாகும் காமெடி, சஸ்பென்ஸ் திரைப்படம்.. என்ன படம்? எதில்? எப்போது பார்க்கலாம்?
By Chandru
வயிறுவலிக்க சிரிக்கவைக்கும் காமெடி அதனுடன் குறையாத சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த சூப்பரான தெலுங்கு படம் ஒன்று இந்த வீக் எண்டு ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
1/6
Share
அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சுனில்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ரோமாஞ்சகம்'. அப்படம் கடந்த செப் 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
2/6
Share
கதை என்ன? ஹீரோ சுமந்த் பிரபாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து டேட்டிங் ஆப் நிறுவனத்தை தொடங்குகிறார். அந்த டேட்டிங் ஆப்பின் நிறுவனத்தின் பெயர் தான் 'ரோமாஞ்சகம்'. அந்த டேட்டிங் ஆப் மூலம் சென்னையை சேர்ந்த ஒரு இளம் பெண் அனந்திகாவை சந்திக்கிறார்.
3/6
Share
சுமந்த்-அனந்திகா இருவரும் பேசி பழகி வருகின்றனர். இது காதலாக மாறினால் தான் தொடங்கிய டேட்டிங் ஆப் வெற்றிபெற்றுவிடும் என ஹீரோவும், ஹீரோவின் நண்பர்களுக்கு நம்பிக்கை வருகிறது. சுமந்த்-அனந்திகா இருவரும் மணிக்கணக்கில் பேசத் தொடங்குகின்றனர்.
4/6
Share
ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். சுமந்த், அனந்திகாவை சப்ரைஸாக பார்க்க சென்னை செல்கிறார். அனந்திகாவை சந்திக்க ஹோட்டலுக்கு வர சொல்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அனந்திகா வரவில்லை. ஒருகட்டத்தில் அனந்திகா, சுமந்தின் போன் கால், வாட்ஸ் ஆப் அனைத்தும் பிளாக் செய்துவிடுகிறார்.
5/6
Share
ஆசையுடன் வந்த சுமந்துக்கு பெரும் ஏமாற்றமே. ஏன்? என்ன ஆனது? அனந்திகா ஏன் சுமந்தை சந்திக்கவில்லை? இருவருக்கும் என்ன ஆனது? இருவரும் மீண்டும் காதலித்தனரா? என்பதே படத்தின் காமெடி கலந்த ரொமான்டிக் கதைக்களம்.
6/6
Share
ஓடிடி? தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் ஆக்டொபர் 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications