Home / Photos
காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.. வெளியான திருமண போட்டோஸ்!
By Chandru
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், காதலனை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
2/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, கையில் துணிப்பையுடன் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்லும் காட்சி ஒருவாரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது சோசியல் மீடியாக்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதனை சுற்றி பல மீம்கள் உருவாக்கப்பட்டு நெட்டிசன்களால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரோஷினி, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
பாரதி கண்ணம்மா சீரியல் இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து காளி வெங்கட் நடிப்பில் வெளிவந்த 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அப்படம் இவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது.
5/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்திலும் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார். இப்படியாக வெள்ளித்திரையில் பயணித்து வரும் ரோஷினி, திடீரென திருமண உறவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Roshni Haripriyan
Share
இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்டார் ரோஷினி ஹரிப்ரியன். இவரின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இவரின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications