வேற லெவல் வசூல்.. அதிரடி கம்பேக் கொடுத்த சமந்தா.. 'எங்கள் தங்கம்' படத்தின் 10 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'எங்கள் தங்கம்' திரைப்படம் கடந்த 10 நாளில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பின்னடைவு: தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. செம உச்சத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக இருந்து வந்த சமந்தா திடீரென அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து போராடி மீண்டு வந்த சமந்தாவுக்கு அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் கைகொடுக்கவில்லை. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கில் வெளிவந்த 'குஷி' திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்று ஏமாற்றத்தை தந்தது.
மீண்டு எழுந்த சம்மு: அதன்பின்னர் சமந்தா நடிப்புக்கு கொஞ்சம் கேப் விட்டு திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கினார். அதை தொடர்ந்து காதல் திருமணமும் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்த சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவான 'எங்கள் தங்கம்' திரைப்படத்தில் நடித்தார். சமந்தாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமாகும்.
எங்கள் தங்கம்: இயக்குநர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'எங்கள் தங்கம்'. சமந்தாவுடன் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கம்பேக்: அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டியுள்ளார். இப்படத்தின் மூலம் சமந்தா தரமான கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். படம் முதல் நாளில் இருந்து பாசிடிவ் விமர்சனங்கள் பெற வீக் எண்டு நாட்களில் கூட்டம் அலைமோதியதாம். அதன்படி வசூலிலும் மளமளவென உயர்ந்தது.
வசூல்: விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டடித்து வரும் 'எங்கள் தங்கம்' 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் கடந்த 10 நாட்களில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வரும் வாரங்கள் ரூ.100 கோடி வசூலை தொடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications