Home / Photos
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! தாயான பிறகு ஆளே மாறிய சூர்யா பட நடிகை.. அவரே பகிர்ந்த போட்டோஸ் பாருங்க!
By Chandru
நடிகை சமீரா ரெட்டியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@sameera reddy
Share
பொதுவாகவே பெண்கள் தாய்மையடைந்த பிறகு உடலளவில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. அதிலும் நடிகைகளை பொறுத்தவரை தாயான பிறகு சரியான டயட், வொர்கவுட் என தங்களின் உடலை நல்ல ஷேப்பில் வைத்துக்கொள்ளத்தான் முயற்சிப்பார்கள் காரணம் சினிமா துறையில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதற்காக தான். அதில் சிலர் பழைய உடல் அமைப்பிற்கு மாறுவர் சிலர் எதார்த்தத்தை விரும்புவர். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி தனது முன் பின் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
2/7
Photo Credit: instagram@sameera reddy
Share
ஹிந்தி திரை உலகம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சமீரா ரெட்டி. சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். எண்ட்ரியான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். இளசுகளின் மனதையும் கொள்ளையடித்தார்.
3/7
Photo Credit: instagram@sameera reddy
Share
தொடர்ந்து அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@sameera reddy
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வேட்டை, அதன்பின்னர் தமிழில் நடிக்கவே இல்லை. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். நடிப்பில் பிஸியாக இருந்தபோதே 2014ல் அக்ஷய் வர்தே என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram@sameera reddy
Share
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு இவர், இரண்டு குழந்தைக்கு தாயானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் 2024ல் ஒரு ஹிந்தி படமும், நடப்பாண்டில் ஒரு ஹிந்தி படம் என சினிமாவில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@sameera reddy
Share
இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கத்தொடங்கிய இவர், குழந்தைகள், மாமியாருடன் விலாக்ஸ் வீடியோ எடுக்க தொடங்கினார். தொடர்ந்து வீடியோக்கள் எடுத்து ரீல்ஸ்களாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். மற்றொரு பக்கம் செம ஃபிட்டாக இருந்த சமீரா, குழந்தைகளை பெற்றெடுத்த பின் ஆளே மாறிவிட்டார்.
7/7
Photo Credit: instagram@sameera reddy
Share
2009ல் எடுக்கப்பட்ட போட்டோவையும் சமீபத்திய போட்டோவையும் ஒப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 17 வருடங்களில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பகிர்ந்துள்ளார். தற்போது சமீராவின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆளே டோட்டலா மாறிட்டீங்களே? அடையாளமே தெரியலையே? என சமீராவின் போட்டோவுக்கு கமெண்ட் மற்றும் லைக்குகளை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications