தீய சக்தியின் பிடியில் அப்பாவி குடும்பம்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவான திகில் திரைப்படம்.. என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
திகில் நிறைந்த ஹாரர் திரைப்படங்களுக்கு என்றுமே மவுசு அதிகம் தான். அப்படியான சஸ்பென்ஸ், ட்விஸ்ட் என விறுவிறுப்பு காட்சிகள் நிறைந்த திகில் படத்தை பற்றி தான் நம் இந்த பதிவில் பார்ப்போம்.
மாந்திரீகம், பயமுறுத்தும் தீய ஆவிகள் பின்னணியில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படம் 'சாத்தான் தி டார்க்'. வாங்க இந்த படத்தை பற்றி பார்ப்போம்.
படக்குழு: மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் எம்ஜே ஐரா பாலக், சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரோ, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹாரா திரைப்படம் 'சைத்தான் தி டார்க்'. அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
கதை: வீட்டில் ஒருத்தர் இரண்டு பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.. ஆனால் ஒரு கிராமமே கடவுள் நம்பிக்கை இல்லாமல் உள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது சரி ஆனால் அனைவருக்கும் சாத்தான் வழிபாட்டில் அதிக நம்பிக்கை உள்ளது.
சாத்தான் வழிபாட்டிற்காக ஆடு, மாடு, கோழி சில நேரங்களில் மனிதர்களை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலம் கடந்து செல்ல ஒரு கட்டத்தில் அந்த நம்பிக்கையில் இருந்து அனைவரும் வெளிவந்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அந்த கிராமத்திற்கு ஐரா தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். ஐராவின் தாயார் திடீரென தன்னை தானே காயப்படுத்திக்கொள்கிறார். என்ன நடக்குது ஒன்றும் புரியாமல் ஐரா பதட்டமாகிறார். இச்சம்பவத்தை கேட்டு ஐராவின் காதலர் எம்.ஜே வீட்டுக்கு வர அங்கு ஒரு மர்மமான உருவத்தை பார்க்கின்றனர்.
தொடர்ந்து வீட்டில் நடக்கும் மனுஷ்ய சக்திகள் ஐரா குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. மேலும் கிராமத்தில் ஏகப்பட்ட மர்ம மரணங்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் என்ன? தீய சக்தியின் நோக்கம் என்ன? இறுதியில் அந்த குடும்பத்திற்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
ஓடிடி: கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி தியட்டரில் ரிலீசான இந்த ஹாரர் திரைப்படம் திகில் பிரியர்களை அதிகம் ஈர்த்தது. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகி அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications