Home / Photos
PHOTOS : குடும்பத்துடன் கேக் கெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 'செம்பருத்தி' சீரியல் நடிகை.. இணையத்தை கலக்கும் பிக்ஸ்..
By Chandru
சீரியல் நடிகை லட்சுமி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகை லட்சுமி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை லட்சுமி. சீரியல் நடிகையாக அறிமுகமாவதற்கு முன் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர்வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் லட்சுமி அறிமுகமானார்.
3/8
Photo Credit: instagram
Share
ஊர்வம்பு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானதால் இவரை ஊர் வம்பு லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார். டிவி நிகழ்ச்சிகளில் கலக்கிய லட்சுமிக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான அகல்யா, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகையாக அறிமுகமான லட்சுமியை பிரபலமாகியது இந்த 'அகல்யா' சீரியல் தான். இதைத்தொடர்ந்து ஏகப்பட்ட சீரியல்களில் கலக்கல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கும் லட்சுமி, நெகட்டிவ் கதாபாத்திரத்தை அசால்ட்டாக நடித்து அசத்துவார்.
5/8
Photo Credit: instagram
Share
லட்சுமியின் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சன் டிவியில் கலக்கிய லட்சுமிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இந்த சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றல் சும்மா விடுவாரா..
6/8
Photo Credit: instagram
Share
பலரின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி சீரியல் சுமார் 5 வருடம் ஒளிபரப்பானது, 1000 எபிசோடுகளை தாண்டி ஓடிய இந்த சீரியலை யாராலும் மறக்கமுடியாது. அதே சமயத்தில் இந்த சீரியலில் வரும் வனஜா கதாபாத்திரத்தையும் யாராலும் மறக்கமுடியாது. நடிகை லட்சுமிக்கு ஊர்வம்பு அடையாளமாக இருந்த நிலையில் செம்பருத்தி சீரியலுக்கு பின் வனஜாவாக ரசிகர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
7/8
Photo Credit: instagram
Share
செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான லட்சுமி சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டியுள்ளார். குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
8/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் லட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications