Home / Photos
PHOTOS : 'மெட்டி ஒலி' சீரியலில் வரும் போஸ் கதாபாத்திரத்தை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்களேன்..!
By Chandru
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தால் வெளியாகி ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தால் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், சீனும் பார்வையாளர்களை உணர்ச்சி அடைய செய்யும் அளவிற்கு மிக நுணுக்கமாக திரைக்கதை எழுதப்பட்டுருக்கும்.
3/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் மெட்டி ஒலி சீரியலில் வரும் பல கதாபாத்திரங்களில் 'போஸ்' என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. போஸ் என்ற கதாபாத்திரத்தை ஒரு முரட்டு தனமான அப்பாவிபோல் நடித்து தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை பலரின் கவனத்தை ஈர்த்தவர் வெங்கட்.
4/8
Photo Credit: instagram
Share
போஸ் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக வெங்கட்டை போஸ் வெங்கட் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து தமிழில் ஏகப்பட்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் கலக்கிய போஸ் வெங்கட்டுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரையில் கால் பதித்த போஸ் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இன்றுவரை கலக்கிக் கொண்டிருக்கிறார்.
6/8
Photo Credit: instagram
Share
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களையும் ஈர்த்த போஸ் தமிழில் அதிகளவு படங்களில் நடிக்கவில்லை. அனால் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
7/8
Photo Credit: instagram
Share
தமிழ் மட்டுமல்லாமல் மலையாள, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு நல்ல டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை, வெள்ளைத்திரை என கலக்கும் போஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார்.
8/8
Photo Credit: instagram
Share
இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து போஸ் அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications