தவெக-வில் இணைந்த சீரியல் நடிகை.. மனதார விஜய்யை நம்புவதாக உருக்கம்! யாருன்னு பாத்தீங்களா? போட்டோஸ்!
பிரபல சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ், விஜய்யின் தவெக கட்சியில் உறுப்பினராக இணைந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'சிங்கிள் பசங்க' ஷோவில் கூமாபட்டி தங்கபாண்டியனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். மக்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட ஜோடியாக கூமாபட்டி தங்கபாண்டி-சாந்தினி ஜோடி உள்ளனர்.
சீரியலில் கிடைக்காத வரவேற்பு டிவி நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டியனுடன் சேர்ந்த நடித்ததால் மிகவும் பாப்புலர் ஆனார். இதன் மூலம் இருவரும் மிகவும் நட்பாக பழகி வருகின்றனர். அவ்வப்போது இருவரும் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியாக்களில் பதிவு செய்தும் வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாந்தினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு இளம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications