Home / Photos
மாமியார், மாமனாருக்காக இப்படியா? களத்தில் இறங்கிய சீரியல் நடிகை கண்மணி!
By Divya Bala
தமிழ் சீரியல்களில் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆனது. இதில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த சீரியலின் தொடக்கத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது வித்தியாசமான நடிப்பால் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். அவரது நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
3/5
Photo Credit: Instagram
Share
பின்னர் சீரியல் முடிவுக்கு வந்த பிறகு ஜீ தமிழ் டிவிக்கு மாறிய கண்மணி, அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதில் டூயல் ரோலில் நடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
4/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் பிஸியாக இருந்த அவர், இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் மாடலிங் மற்றும் போட்டோஷூட்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
5/5
Photo Credit: Instagram
Share
சன் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், தனது கணவரின் பெற்றோரின் 60வது திருமண விழாவை முன்னின்று நடத்தி அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications