Home / Photos
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு டும் டும் டும்.. சைலெண்டாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மனோகரனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
1/8
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
2/8
Share
பாரதி கண்ணம்மா சீரியலின் தொடக்கத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். இவரின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
3/8
Share
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் ஜீ தமிழ் டிவியில் தாவிய கண்மணி, அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
4/8
Share
குறிப்பாக அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் டூயல் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
5/8
Share
சின்னத்திரையில் பிஸியாக இருந்த கண்மணி, என்னக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
6/8
Share
அஷ்வத் என்பவரை நீண்ட நாள் காதலித்து வந்த கண்மணி தற்போது அவரை திருமணம் செய்யவுள்ளார்.
7/8
Share
அஷ்வத் வேற யாரும் இல்லை பிரபல டிவி தொகுப்பாளராக வலம் வருபவர். சன் டிவி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பாப்புலராக வலம் வருகிறார்.
8/8
Share
தற்போது கண்மணி மனோகரன் - அஷ்வத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலயில் மிகவும் சிம்புளாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications