Home / Photos
அழகு பதுமையாய்.. கிருஷ்ணன் அருகில் சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் !
By Divya Bala
ஜீ தமிழில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் புத்தாண்டிற்கு போட்டோஷூட் செய்துள்ளார். இவை இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
ரேஷ்மா ரேயா இவர் ரேஷ்மா முரளிதரன் என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை , மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் நடன நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கையை திரையில் தொடங்கினார்.
2/7
Photo Credit: Instagram
Share
டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் முதல்முறையாக தோன்றினார். இதில் இவரது நடனம் பெரிதாக பேசப்பட்டது. அதன் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ஜீ5 தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற தமிழ் சீரியலில் நடிகையாக ரேஷ்மா அறிமுகமானார்.
3/7
Photo Credit: Instagram
Share
தனது நடிப்பை இந்த தொடரில் அருமையாக வெளிப்படுத்தினார். இந்த சீரியலுக்கு பிறகு ரேஷ்மாவிற்கு வாய்ப்புகள் பல குவிந்தன. அவர் 2016 இல் மிஸ் மெட்ராஸ் ஆக 2வது ரன்னஅப் ஆனார். ரேஷ்மா சென்னை எஸ்டிஎன்பி வைஷ்ணவ் மகளிர் கல்ரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
கோலாஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டைலர் தொடரில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் கதாநாயகனாக நடித்த மதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
5/7
Photo Credit: Instagram
Share
மதன் பூவே பூச்சூடவா தொடரில் இவருடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு அபி டைலர் தொடரில் ஜோடியாக நடித்தார்கள். விஜய் டிவியில் விறு விறுப்பாக ஒளிபரப்பாகிய சீரியல் கிழக்கு வாசல்.
6/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடரில் நடிகர் விஜயின் அப்பா நடித்தார். இதிலும் ரேஷ்மா முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நடித்தார்.
7/7
Photo Credit: Instagram
Share
ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது புத்தாண்டிற்கு போட்டோஷூட் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications