Home / Photos
விஜய் டிவி மலர் டீச்சருக்கு 'டும் டும் டும்'.. இணையத்தை கலக்கும் திருமண புகைப்படங்கள்!
By Divya Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் தஒன்று கனா காணும் காலங்கள். இதில் மலர் டீச்சராக நடித்த சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
1/8
Photo Credit: Instagram
Share
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப் தொடரின் 2ம் சீசனில் சங்கீதா மலர் டீச்சராக நடித்தார். அதே சீரியலில் மாணவனாக நடித்த அரவிந்த் சேஜு விற்கும் இவருக்கும் காதல் மலர, தங்கள் காதலை ரசிகர்களுக்கு சமீபத்தில் அறிவித்தனர்.
2/8
Photo Credit: Instagram
Share
இவர்களது திருமணம் நேற்று பிப்ரவரி 2ம் தேதி நடைபெற்றது. சங்கீதா ஒரு பிரபலமான நடிகை மற்றும் விஜே. சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற தமிழ் சீரியலில் நடிகையாக அறிமுகமானார்.
3/8
Photo Credit: Instagram
Share
சன்டிவியின் அன்பே வா சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அழகு சீரியலில் நடிப்பதற்கு முன் ஐடி ஊழியராகப் பணியைத் தொடங்கினார்.
4/8
Photo Credit: Instagram
Share
இவர் விஜே ஆக இருந்த பொழுது ஜெயம் ரவி, தலைவாசல் விஜய், நரேஷ் ஈஸ்வர், மித்ரா குரியன் மற்றும் நிவேதா பெத்துராஜ் போன்ற சில பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அவர் பேட்டி எடுத்துள்ளார் .
5/8
Photo Credit: Instagram
Share
அரவிந்த் யூடுப் சேனலில் நடித்து பிரபலமானவர். அதன் விளைவாக இவருக்கு கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
6/8
Photo Credit: Instagram
Share
மேலும் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் கனா காணும் காலங்கள் தொடரில் ஒன்றாக நடித்தனர்.
7/8
Photo Credit: Instagram
Share
ஆனால் சங்கீதா இந்த தொடரில் பாதியிலேயே விலகிவிட்டார். அதன் பிறகு தான் தமிழும் சரஸ்வதியும் தொடரில் வசந்தரவாக என்ட்ரி கொடுத்தார்.இவர்களது திருமணத்திற்கு சீரியல் நட்சத்திரங்கள் பலரும் வந்து வாழ்த்தியுள்ளார்கள்.
8/8
Photo Credit: Instagram
Share
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்களும் கமெண்டில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications