Home / Photos
விஜய் டிவி சீரியல் நடிகையா இது? டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறாங்களே!
By Divya Bala
விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகை ஷோபனா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை ஷோபனா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2/5
Photo Credit: Instagram
Share
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷோபனா, தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிகையாக மட்டுமல்லாமல், திறமையான நடனக் கலைஞருமான ஷோபனா, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், 2017-ஆம் ஆண்டு நடிகர் விஷாலிடம் இருந்து இவாகா விருதையும் பெற்றுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
பட்டப்படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் களமிறங்கிய அவர், பல்வேறு பிராண்டுகளின் விளம்பரங்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோ விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவி சீரியல்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
நடிப்புடன் அவ்வப்போது போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வரும் ஷோபனா, தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். அவரது லேட்டஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications