Home / Photos
40 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஷிகர் தவான்.. பொண்ணு எந்த ஊர் தெரியுமா? வெட்டிங் கிளிக்ஸ்!
By Chandru
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவரின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
இந்திய அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மானாக மிகவும் புகழ்பெற்றவர் ஷிகர் தவான். இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.
2/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
ஐபிஎல் தொடரில் டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக வெளையாடியுள்ளார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடக்கூடியவர்.
3/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ஷிகர் தவானுக்கு மிஸ்டர் ஐ.சி.சி என்ற பெயரும் உண்டு.
4/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
2012ம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இவர்களின் 11 வருட திருமண வாழ்க்கை 2023ல் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர்.
5/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
விவாகரத்துக்கு பின்னர் சோஃபியா ஷைன் என்பவரை காதலித்து வந்தார். 2025 மே மாதம் தனது காதலி இவர் தான் என்பதை பொதுவெளியில் உறுதிசெய்தார்.
6/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
7/7
Photo Credit: instagram@Shikhar Dhawan
Share
ஷிகர் தவான் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சோஃபியா ஷைன், அயர்லாந்தில் பிறந்து வளந்தவர். துபாயில் மலர்ந்த காதல் தற்போது இந்தியாவில் திருமண பந்தத்தில் இணைந்தனர். ஃபேன்ஸ், பிரபலங்கள் ஷிகர் தவானுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications