சின்னத்திரையில் வலம் வந்த ஷிவானி, பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கிய நிலையில் மொத்தம் நான்கு படங்களில் முக்கிய ரோலில் நடித்தார்.
தமிழ் இவர் இறுதியாக நடித்த படம் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', அதற்கு பின் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். சரியான படங்கள் கிடைக்கவில்லை என்றும் கூட சொல்லலாம்.
படங்களில் கமிட்டாகாத ஷிவானி, சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் இவர், தற்போது கருப்பு நிற சேலையில் கூலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கலராக இருக்கும் பெண்களுக்கு வெள்ளை கருப்பு பார்டர் டிசைன் போடப்பட்ட சேலை செம எடுப்பாக இருக்கும். மேலும் அதில், தங்க ஜரிகை டிசைன் சேலையை எடுப்பாக காட்டுகிறது. தற்போது ஷிவானியின் இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.