அமரன் கொடுத்த பெரிய ஹிட்.. சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அடுத்தடுத்து காத்திருக்கும் படங்கள் என்னென்ன?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன? யாருடன் கூட்டணி அமைத்துள்ளார்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அது இது எது', 'கலக்கப்போவது யார்' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் கலக்கிய இவர் 'மெரினா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து வெவ்வேறு இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து பல ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது கோலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகராக ஜொலித்து வருகிறார்.
ரஜினி, விஜய், அஜித் இவர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனின் பெயர் இடம்பிடித்துள்ளது, இவரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியை காட்டுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்த சிவாவுக்கு மிக பெரிய மார்க்கெட் உள்ளது. கரணம், இவர் நடிப்பில் இறுதியாக வெளியான 'அமரன்' மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சிவாவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து.
அமரன் கொடுத்த பெரும் வெற்றியை தொடர்ந்து ஸ்டார் இயக்குநர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவா நடிப்பில் 'மதராஸி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படம் உருவாகி வருகிறது. சிவாவுடன் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா நடிக்கின்றனர். மொழி போர் தியாகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 2026 பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சிவாவின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து 'குட் நைட்' பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், புஷ்கர் காயத்ரி மற்றும் வெங்கட் பிரபு என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளார். இருப்பினும் மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் அமரன் வெற்றியை விட பல மடங்கு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் படத்தில் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சிவா, இனி வரும் படங்களில் அவரின் சம்பளம் பல மடங்கு உயரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications