Home / Photos
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ்.. மறக்காம இதை ஃபாலோ பண்ணுங்க!
By Divya Bala
முகத்தில் கருப்பாக புள்ளிகள் வர பல காரணங்களினால் வரலாம். வெயில், ஹார்மோன் மாற்றங்கள், வயது முதிர்ச்சி, முகப்பரு என இந்த கரணங்கள் அதில் அடங்கும். அதற்கு இந்த 5 டிப்ஸ்களை வழக்கமாக தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
1/5
Share
சூரிய ஒளி இந்த கரும்புள்ளிகளை இன்னும் மோசமாக மாற்றும். அதனால் சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்த தவற கூடாது. வீட்டில் இருந்தாலும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்க்ரீன்னை முகத்தில் தடவி கொள்வதால் சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.
2/5
Share
முகத்தில் சரும பராமரிப்பிற்காக ஸ்க்ராபர் போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது பேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும். கரும்புள்ளிகள் மறையவும் உதவியாக இருக்கின்றன.
3/5
Share
முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு வைட்டமின் சி அடங்கிய சீரம்களை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக மாறும். மேலும் கரும்புள்ளிகள் மறையவும் உதவியாக இருக்கின்றன.
4/5
Share
முக்கியமாக இந்த கரும்புள்ளிகளை நீக்க மருத்துவரை அணுகி அதற்கான சரியான க்ரீம்களை தெரிந்து கொண்டு அதை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பொலிவடைய ஆரம்பிக்கும்.
5/5
Share
அதுமட்டுமில்லாமல் உண்ணும் உணவும் ஒரு முக்கிய காரணியாகும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என சத்தான உணவுகளை சேர்க்கும்போது உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சருமம் பிரகாசமாகும். இதனால் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.


Click it and Unblock the Notifications