Home / Photos
வங்கிகளுக்கென வழங்கப்படுகின்ற 11 இலக்க IFSC குறித்த சில பயனுள்ள தகவல்கள்..!!
இந்திய நிதி அமைப்பு குறியீடு (Indian Financial System Code) ஆனது ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கு தேவைப்படுகின்ற முக்கியமான அம்சமாகும். இந்த எளிய மற்றும் பாதுகாப்பான முறையை பற்றி விரிவாக பார்ப்போம்.
1/7
Share
இந்த மின்னணு பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2/7
Share
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடி பரிமாற்றம் (RTGS) ஆகிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்த IFSC குறியீடு மிக முக்கியமாக பயன்படுகிறது.
3/7
Share
இந்த IFS குறியீடு (Code) ஆனது இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட தனித்துவமான 11 இலக்க எண் ஆகும். இது ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கி கிளைகளுக்கும் மாறுபடுகிறது.
4/7
Share
வங்கிக்கு ஒதுக்கப்பட்ட IFSCஐ மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியாது. ஒரு வங்கி மறுசீரமைக்கப்பட்டாலோ அல்லது ஒன்றிணைக்கப்பட்டாலோ மட்டுமே IFSC மாறி, புதிய குறியீடு வழங்கப்படும்.
5/7
Share
IFSC-ல் முதலில் 4 எழுத்தும், 5வது பூஜ்ஜியமும் (எதிர்கால பயன்பாட்டிற்காக), இறுதியாக 6 இலக்க எண்ணும் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு HDFC0009046 என்ற வடிவத்தில் IFSC வடிவமைக்கப்பட்டிருக்கும்.
6/7
Share
முதல் 4 ஆங்கில எழுத்துக்கள் (HDFC) வங்கியையும், இறுதியில் உள்ள 6 இலக்க எண்கள் (009046) வங்கிக் கிளையின் முகவரியையும் குறிக்கிறது.
7/7
Share
இந்த IFSC உதவியுடன், வங்கிகளுக்கு இடையே தடையற்ற மற்றும் பிழையற்ற நிதி பரிமாற்றங்களை RBI உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications