அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்.. நயன்தாராவை மிஞ்சிய ப்ரேமம் பட நடிகை.. சூப்பர் லிஸ்ட்!
திரை துறையில் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக பாலிவுட் ஹீரோயின்கள் உள்ளனர். இன்றும் ஸ்டார் ஹீரோக்களுக்கு போட்டியாக சம்பளம் வாங்கி வருகின்றனர். இதனால் என்னவோ தென்னிந்திய ஸ்டார் நடிகைகள் சிலர் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் 7ம் இடத்தில் நடிகை 'தமன்னா' உள்ளார். தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், படம் ஒன்றில் கமிட்டாக சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர்.
தமன்னாவை ஓவர்டேக் செய்து அனுஷ்கா 6ம் இடத்தை பிடித்துள்ளார். தற்போது மலையாள சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனுஷ்கா, படம் ஒன்றில் கமிட்டாக 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். தமிழில் எப்போது இவர் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரியவகை நோயினால் அவதிப்பட்டிருந்தாலும் சினிமா மீது கொண்ட காதலினால் தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு சினிமாவில் செம பிஸியாக இருந்து வரும் சமந்தா, 3 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
எவர்க்ரீன் நடிகை திரிஷா இந்த லிஸ்டில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்' படத்தில் வரும் 'சுகர் பேபி' பாடலுக்கு கலக்கல் நடனமாடி இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். தற்போது வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வரும் இவர், 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
த்ரிஷாவை முன்னுக்கு தள்ளி 3ம் இடத்தை பிடித்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நயன்தாரா. தற்போது 4க்கும் அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன், படம் ஒன்றில் கமிட்டாக 8 கோடி முதல் அதிகபட்சம் 18 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா, இந்த லிஸ்டில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வரும் ராஷ்மிகா, ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். புஷ்பா 2 படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, யாரும் எதிர்பார்த்திடாத நடிகை முதல் இடத்தை பிடித்துள்ளார். மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் சாய், 18 முதல் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வாருகிறார்.


Click it and Unblock the Notifications