ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்.. ஜந்தர் மந்தரில் மாணவர்கள் கைது.. பரபர போட்டோஸ்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
SIR நடவடிக்கையில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக வெளியான தகவல் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சி,மாநில கட்சிகள், கரப்பாண்பூச்சி கட்சி என நாடுமுழுவதும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கரப்பாண்பூச்சி கட்சியினர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 24 மணிநேரத்தில் பதவி விலகவேண்டும் என கேடு கொடுத்தனர்.
24 மணிநேரத்தில் பதவி விலகாவிட்டால் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தனர். அதன்படி இன்று பிற்பகல் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி மாணவர் அமைப்பினர், கரப்பாண்பூச்சி கட்சியினர் பேரணி நடத்தினர்.
பேரணியாக சென்ற மாணவர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
டெல்ல ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுக்கும் முன்னரே டெல்லி போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
ஞானேஷ் குமாருக்கு எதிராக ஆயிரக்கணக்கில் குவிந்த மாணவர்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்யும் டெல்லி போலீஸ்.



Click it and Unblock the Notifications