Home / Photos
PHOTOS : ரசிகர்களை மெர்சல் செய்த 'வாரிசு' ட்ரைலர்.. விஜய் சொன்ன பஞ்ச் டயலாக்கை கவனிச்சீங்களா!
By Chandru
நடிகர் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'வாரிசு' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது வாரிசு ட்ரைலரில் விஜய் பேசியுள்ள பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/10
Photo Credit: filmibeat
Share
நடிகர் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'வாரிசு' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது வாரிசு ட்ரைலரில் விஜய் பேசியுள்ள பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2/10
Photo Credit: filmibeat
Share
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
3/10
Photo Credit: filmibeat
Share
வாரிசு படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது. பாடல்கள் செம ஹிட்டானாலும் நெட்டிசென்கள் வழக்கம் போல் இது வேற பாடலின் காப்பி என விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தனர்.
4/10
Photo Credit: filmibeat
Share
மேலும் வாரிசு படத்தின் ஃபரஸ்ட் லுக் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. ட்ரைலர் வெளியாகி 4 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
5/10
Photo Credit: filmibeat
Share
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல விமர்சனங்களை எதிர்கொண்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 'வாருசூடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
6/10
Photo Credit: filmibeat
Share
குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்த ஆக்ஷன் கட்சிகளும் இடம் பிடித்துள்ளன. விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தவகையில் வாரிசு படத்தில் விஜய் பல பஞ்ச்சுகளை போட்டுள்ளார்.
7/10
Photo Credit: filmibeat
Share
தற்போது வெளியான வாரிசு ட்ரைலரில் விஜய் பல பஞ்ச் டயலாக்குகளை சரவெடியாக சிதறவிட்டுள்ளார். அதில், "எல்லா இடமும் நம்ம இடம் தான்" என்ற டயலாக்குடன் ஆரம்பித்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார்.
8/10
Photo Credit: filmibeat
Share
அதேபோல் அடுத்தடுத்து விஜய் பேசியுள்ள டயலாக்குகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது : "பவர் சீட்ல இல்ல சார்.. வந்து ஒக்காருறான்ல.. அவன்கிட்ட இருக்கு பவர்.." "அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கணும்.. ஏன் சொல்லு.. நான் திருப்பி கொடுக்கும் பொது ட்ரிபுளா கொடுப்பேன்.."
9/10
Photo Credit: filmibeat
Share
"கிரௌண்ட் முழுக்க உன்னோட ஆளுங்களா இருக்கலாம்.. ஆனா ஆடியன்ஸ் மொத்தமும் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க.. கேள்விபட்டுருக்கியா அவன் தான் ஆட்ட நாயகன்.." "குடும்பம் நா குறை இருக்கும் தான்.. ஆனா நமக்கு இருக்குறது ஒரே ஒரு குடும்பம் தான்.."


Click it and Unblock the Notifications