90ஸ் கிட்ஸ்யின் கனவுக்கன்னி.. சன்னி லியோனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? என்னென்ன சொகுசு கார் வச்சுருக்காங்க?
பிரபல கிளாமர் நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு என்ன? அவர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிளாமர் குயின்: பாலிவுட் சினிமாவில் பிரபல கிளாமர் நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். ஒருகாலத்தில் உலகளவில் பிரபலமான ஆபாச நடிகையாக இருந்து இவர், பழசை மறந்து இந்திய சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வருகிறார். இவர் சில தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். ஓ மை கோஸ்ட், தீ இவன், பேட்ட ராப் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
சம்பளம்: இந்தியளவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க 3-4 கோடி ரூபாய் சம்பளம் பெருகிறாராம். அதேபோல் படங்களில் ஐட்டம் பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடுவதற்கு 1-2 கோடி ரூபாய் சம்பளம் பெருகிறாராம். அதுமட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சி, வெப் தொடர்களில் நடிக்க 5 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெற்று வருகிறார்.
பிசினஸ்: நடிப்பில் பிஸியாக இருக்கும் சன்னி லியோன், சைட் பிஸினஸாக 'Starstruck' என்ற அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறார்.
சொத்து மதிப்பு: நடிப்பு, பிசினஸ் என பல வழிகளில் வருமானம் ஈட்டி வரும் சன்னி லியோனின் சொத்து மதிப்பு சுமார் 98-115 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
வீடு: மும்பையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய பங்களா ஒன்றும், 8 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அலுவலகம் ஒன்றையும் வைத்துள்ளார். அதேபோல் அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸில் பங்களா ஒன்றையும் வைத்துள்ளாராம்.
சொகுசு கார்கள்: 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான Maserati Ghibli, 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான BMW 7 Series, 72 லட்சம் மதிப்பிலான Audi A5 Sedan, 70 லட்சம் மதிப்பிலான Mercedes GL 350 D ஆகிய சொகுசு கார்கள் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை 54.7 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications